/உள்ளூர் செய்திகள்/மதுரை/நிலத்தடி நீரில் கடினத்தன்மை அதிகரிப்புநிலத்தடி நீரில் கடினத்தன்மை அதிகரிப்பு
நிலத்தடி நீரில் கடினத்தன்மை அதிகரிப்பு
நிலத்தடி நீரில் கடினத்தன்மை அதிகரிப்பு
நிலத்தடி நீரில் கடினத்தன்மை அதிகரிப்பு
ADDED : செப் 01, 2011 02:08 AM
மதுரை : நிலத்தடி நீரை அதிகரிக்காமல், தொடர்ந்து உறிஞ்சி வருவதால் தண்ணீரின் தன்மை கடினமாவதுடன் துவைக்க கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி வருகிறது.
மழைநீர் சேமிப்பை அமைப்பதை அதிகரிக்க வேண்டும்.தண்ணீரில் உப்புக்களின் அளவு அதிகரிக்கும் போது குடிக்க முடியாது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. கடினத்தன்மை அதிகரிக்கும் போது சோப்பில் நுரை வராது. குழாய்கள் விரைவில் துருப்பிடிக்கும், உப்புக்கள் படியும். பாத்திரத்தில் பிடித்து வைத்தால் அடியில் உப்பு பொரிந்திருக்கும்.கப்பலூர் சிட்கோ தொழிற்சாலை பகுதியில் தண்ணீரில் உப்புக்களின் அளவு 4400 மில்லிகிராம் மற்றும் கடினத்தன்மை 3840 ஆக உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எட்டு மற்றும் 12 மடங்கும் அதிகமாக உள்ளன. மதுரை கோச்சடை, சிம்மக்கல், வில்லாபுரம், பெத்தானியாபுரம், பெருங்குடி, விரகனூரில் கடினத்தன்மை அதிகம். புதுவிளாங்குடி, திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு, அவனியாபுரம் பகுதிகளில் கடினத்தன்மை, உப்புத்தன்மை இரண்டும் அதிகம்.என்ன காரணம்?: தொடர்ந்து தண்ணீரை உறிஞ்சுவதுடன் சரி. தண்ணீரை மீண்டும் நிலத்தடிக்கு கொண்டு செல்வதில்லை. நாம் பயன்படுத்தும் தண்ணீரில் 90 சதவீதம் வீணாகிறது. ஒருபுறம் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி, கழிவுநீரை வெளியேற்றுகிறோம். ஒரு காலகட்டத்தில் கழிவுநீர், நிலத்தடி நீருடன் கலப்பதால், தண்ணீர் கடின, உப்புத்தன்மை பெறுகிறது. இதற்கு ஒரே தீர்வு மழைநீர் சேமிப்பு தான்.என்விரோ கேர் நிர்வாக இயக்குனர் ராஜமோகன் கூறியதாவது:மதுரையில் 37 இடங்களில் தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து வேதியியல், உயிரியல் ஆய்வகங்களில் பரிசோதித்தோம். அவனியாபுரம், வில்லாபுரம், எஸ்.எஸ்.காலனி, ஞானஒளிவுபுரம், விரகனூர், தெப்பக்குளம் பகுதிகளில் 'போர்வெல்' தண்ணீரின் கடினத்தன்மையும், உப்புக்களின் அளவும் அதிகமாக உள்ளது. மழை நன்கு பெய்தால் தண்ணீரின் தன்மை மாறும். வீடு, ரோடுகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும், என்றார்.