/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லேசான மழைக்கு கந்தலாகி போன கோலியனூர் - பண்ருட்டி தார்சாலைலேசான மழைக்கு கந்தலாகி போன கோலியனூர் - பண்ருட்டி தார்சாலை
லேசான மழைக்கு கந்தலாகி போன கோலியனூர் - பண்ருட்டி தார்சாலை
லேசான மழைக்கு கந்தலாகி போன கோலியனூர் - பண்ருட்டி தார்சாலை
லேசான மழைக்கு கந்தலாகி போன கோலியனூர் - பண்ருட்டி தார்சாலை
ADDED : ஆக 28, 2011 11:16 PM
விழுப்புரம் : கோலியனூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலை மழையால் மோசமானதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலை சில தினங்களாக பெய்த மழையால் மிகவும் மோசமாக மாறியுள்ளது. விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ் சாலை ஆணையம் சார்பில் புதிய சாலை அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சாலை பணிகள் முடிய கால தாமதம் ஏற்படும். இந்த சாலை அடிக்கடி வீணாகி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம், பஞ்சமா தேவி உட்பட பல இடங்களில் சாலையில் இரு புறமும், நடுவிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கின்றனர். இந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.