Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்: நயினார் நாகேந்திரன் உறுதி

UPDATED : செப் 21, 2025 05:28 PMADDED : செப் 21, 2025 12:39 PM


Google News
Latest Tamil News
சேலம்: 'பாஜ நிச்சயமாக பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடாது' என, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை அவரது வீட்டில் சந்தித்து பேசிய பிறகு நிருபர்களிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மரியாதை நிமித்தமாக இபிஎஸ்யை சந்தித்தேன். இதில் அரசியல் பேசவில்லை. பாஜ நிச்சயமாக எந்த கட்சியின் உட்கட்சி பிரச்னையிலும் தலையிடாது. அரசியலில் நிரந்தரமான தலைவர்கள் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் இருக்கிறது.

மக்கள் எழுச்சி

திமுக 4 ஆண்டுகளாக ஆட்சியில் மக்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. தேர்தலில் மக்கள் மிக பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என எங்களுக்கு தெரிகிறது. ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் தான் இருக்கிறது. தம்பி விஜய் வந்து இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஜோசியம்

கூட்டம் வருவதை வைத்து, திமுகவுக்கு, எங்களுக்கும் தான் போட்டி என்று எல்லாம் சொல்லக்கூடாது. அதற்கு தேர்தல் வர வேண்டும். ஒழுங்கான வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு எல்லாம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். மக்கள் ஓட்டு போட வேண்டும். அதன் பிறகு தான் சொல்ல முடியும். ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. வேட்பாளராக வேனில் செல்லும் மக்களின் சைகைகளை பார்த்தாலே எது ஓட்டாக மாறும் என்று நமக்கு தெரியும்.

பெரிய கட்சி

முதல்வராக பணியாற்றி உள்ள இபிஎஸ்க்கு எல்லா விஷயங்களும் தெரியும்.

திடீர்னு வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி? அது எப்படி பொறுத்தமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுடன் யாரையும் ஓப்பிட்டு பேசக்கூடாது. நாங்கள் 300க்கும் மேற்பட்ட எம்பிக்களை வைத்து இருக்கிறோம். 1500 எம்எல்ஏக்கள் வைத்து இருக்கிறோம். நாங்கள் மிகப்பெரிய கட்சி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us