ADDED : ஆக 27, 2011 11:57 PM
ஓசூர்: ஓசூர் ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி மாணவர்கள் மத்தியில் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவிகள் புவி வெப்பமயமாதல், சுகாதாரம் ஆகியவை குறித்த தங்களுடைய பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். மாவட்ட கல்வி அதிகாரி ராமசாமி கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் பிரகாசமேரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சலேத் மேரி வரவேற்றார். நடுவர்களாக இன்ஜினியர் சேனாபதி, ஆடிட்டர் பாலச்சந்திரம், பேராசிரியர் பாவானி ஆகியோர் இருந்தனர். மாணவிகள் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றவது, சுகாதாரமான முறையில் பட்டு பூச்சி வளர்ப்பு, புவி வெப்ப மாயதால் ஆகியவை குறித்து வைத்திருந்த மாணவிகளுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்த மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அதகிõரி ராமசாமி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


