/உள்ளூர் செய்திகள்/மதுரை/லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கைலாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை
லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை
லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை
லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : ஆக 22, 2011 02:23 AM
மதுரை : அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை
முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, தொழில்
வர்த்தக சங்கம் வலியுறுத்தியது.சங்க தலைவர் ஜெகதீசன் அறிக்கை: டிச., 2ல்
மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் முன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த
அடிப்படையில் லிட்டருக்கு ரூ.3.35 உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வை வாபஸ்
பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள்
காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் வர்த்தக துறையினருக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து
சரக்குகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். உற்பத்தி பொருட்களை எடுத்து
செல்வதில் ஏற்பட்ட இந்த தடங்கல் காரணமாக பொருட்கள் வீணாகும். தொழில்
இழப்பும் ஏற்படும். காய்கறி, அரிசி போன்ற பொருட்களின் விலை உயர்ந்து மக்கள்
பாதிக்கப்படுவர். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் பாதிக்கப்பட்டு, அந்நிய
செலாவணி இழப்பு நேரிடும். லாரி பணியாளர்களும், கூலி தொழிலாளர்களும்
வேலையிழந்துள்ளனர். அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும், என
தெரிவித்துள்ளார்.