Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நவசண்டி மகா யாகம்; பக்தர்கள் பங்கேற்பு

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நவசண்டி மகா யாகம்; பக்தர்கள் பங்கேற்பு

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நவசண்டி மகா யாகம்; பக்தர்கள் பங்கேற்பு

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நவசண்டி மகா யாகம்; பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஆக 06, 2011 02:20 AM


Google News
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நேற்று நடந்த 6ம் ஆண்டு நவசண்டி மகா யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதிகொண்டுள்ள கிரிகுஜாம்பிகை சன்னதியில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் நவசண்டி மகாயாகம் இரண்டு நாட்கள் நடந்து வருவது சிறப்பு. இவ்வாண்டும் நேற்று முன்தினம் மாலை நவசண்டி மகாயாகம் துவங்கியது. கேரள ஜண்டை வாத்தியங்கள் முழங்க நடந்த நவசண்டி மகா யாகத்திற்கு 13 முறை யாக சாமான்கள் ஊர்வலமாக அம்பாள் கோவிலில் இருந்து யாகசாலைக்கு கொண்டு வந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நவசண்டி மகாயாகத்தில் பங்கேற்றனர். முன்னதாக கிரிகுஜாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. நவசண்டி மகாயாகத்தின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் நவசண்டி மகாயாகத்தின் ஒரு பகுதியாக கஜபூஜை நடப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஒப்பிலியப்பன்கோவிலிலிருந்து யானைக்குட்டி பூமா வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடைபெறும். இவ்வாண்டு ஒப்பிலியப்பன்கோவிலிலிருந்து யானைக்குட்டி பூமாவை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் தனியார் யானை வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் நவசண்டி மகாயாகம் துவங்கப்பட தாமதமானது. நவசண்டி மகா யாகத்தின் ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர், முன்னாள் அறங்காவலர் இ.பி., உப்பிலிசீனிவாசன், சங்கர் சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us