காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி
காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி
காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 6 பேர் காயமடைந்தனர்.
எல்லையில், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீரில் உரி பகுதியில் ஒருவரும், பூஞ்ச்சில் ஒருவரும், பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள் பலவும், தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளன.
பாரமுல்லா மாட்டம் உரி பகுதியில் நர்கிஸ் பானு (45), பாக்., தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி உயிரிழப்பு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜ்குமார் தாப்பா உயிரிழந்தார். இதனை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிவு செய்துள்ளார். அவர் நேற்று நடந்த ஆன்லைன் கான்பரன்ஸ் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.