/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வுவெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு
வெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு
வெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு
வெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : வெடிமருந்து குடோனில் ஆர்.டி.ஓ., பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் ஆர்.டி.ஓ., பிரியா நேற்று காலை 11.40 மணியளவில் விக்கிரவாண்டியிலுள்ள ரேஷன் கடைகள் மற்றும் அரச மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார்.
பின்னர் ஆவுடையார்பட்டு கிராமத்தில் உள்ள ராஜாம்பாள் என்பவரின் வெடி மருந்து குடோனை ஆய்வு செய்தார். அங்குள்ள காலனிக்கு சென்று உத்திரபிரதேச மாநிலத்தில் ரயில்வே துறையில் பணியிடம் பெற்ற விஜயகாந்த் என்பவரின் கல்வி மற்றும் ஜாதிச் சான்றுகளை உறுதி செய்ததுடன், கோதண்டபாணி என்பவரின் வீட்டுமனை பட்டா ஆய்வு செய்தார். வருவாய் ஆய்வாளர்கள் ரவிசங்கர், சிவக்குமார், வி.ஏ.ஓ., தேவநாதன் உடனிருந்தனர்.