கனடாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; 9 பேர் கைது!
கனடாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; 9 பேர் கைது!
கனடாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; 9 பேர் கைது!
ADDED : ஜூன் 12, 2025 10:08 AM

ஒட்டாவா: கனடாவில் போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வந்தது அம்பலம் ஆனது.
கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளி 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள 479 கிலோ கோகோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்கு லாரிகளில் போதைப்பொருள் கடத்துவது அம்பலம் ஆனது. துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கும்பல் மீது கனடா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு:
* டொராண்டோவைச் சேர்ந்த சஜ்கித் யோகேந்திரராஜா (31),
* பிராம்ப்டனைச் சேர்ந்த மன்பிரீத் சிங் (44)
* ஹாமில்டனைச் சேர்ந்த பிலிப் டெப் (39),
* பிராம்ப்டனைச் சேர்ந்த அரவிந்தர் பவார் (29),
* காலேடனைச் சேர்ந்த கரம்ஜித் சிங் (36), குருதேஜ் சிங் (36),
* கேம்பிரிட்ஜைச் சேர்ந்த சர்தாஜ் சிங் (27),
* ஜார்ஜ்டவுனைச் சேர்ந்த ஷிவ் ஓங்கர் சிங் (31),
மிசிசாகாவைச் சேர்ந்த 27 வயது ஹாவோ டாமி ஹுய்ன் ஆகியோர் ஆவர்.
''போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது'' என போலீசார் தெரிவித்தனர்.