/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் நிறைவில்லைசுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் நிறைவில்லை
சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் நிறைவில்லை
சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் நிறைவில்லை
சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் நிறைவில்லை
ADDED : ஜூலை 29, 2011 11:14 PM
பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டியில் மாதிரி சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் பணிகள் துவக்கப்படவில்லை.
பந்தலூர் உப்பட்டி புஞ்சைவயல் பகுதியில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட துவங்கியது. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய ஊரக நலவாழ்வு திட்டத்தின் கீழ், அருவங்காடு மற்றும் உப்பட்டி பகுதிகளில் மாதிரி சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதில், உப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் பகுதியில் 3 ஏக்கர் நிலமும் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக 21.79 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. உப்பட்டி பகுதியில் கட்டடம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலம், 1997ம் ஆண்டு ஜூலை மாதம் பாரி ஆக்ரோ நிறுவனத்தால் நெல்லியாளம் நகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட 10.68 ஏக்கர் நிலத்திற்குட்பட்ட பகுதியாகும். இந்த இடத்தை முறையாக தானபத்திரம் செய்யாததால் பொது சுகாதார துறைக்கு நிலமாற்றம் செய்ய முடியவில்லை. இதன்பின் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.பொது பணித்துறைக்கு பணி ஒதுக்கப்பட்டும், இதுவரை பணிகள் துவக்கப்படவில்லை. நிதி போதாது என்று கூறி டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனக்கூறப்படுகிறது. கட்டடம் கட்டுவதற்கான நிலம் பெறுவதில் நிலவி வந்த பிரச்னை தீர்வு காணப்பட்டும், போதுமான நிதி இல்லாத நிலையில் சுகாதார நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.