/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்புபெரியாறு கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
பெரியாறு கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
பெரியாறு கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
பெரியாறு கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 27, 2011 10:39 PM
கம்பம் : முல்லைப் பெரியாற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தமபாளையத்தில் சமீபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கூடலூர், மார்க்கையன்கோட்டை, சின்னஓவுலாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றனர்.
கரையோர ஆக்கிரமிப்பு: தென்மாவட்டங்களின் ஜீவநாடியாக விளங்கும் முல்லைப் பெரியாற்றின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தென்னந்தோப்புகளாக மாறி வருகிறது. லோயர்கேம்பில் ஆரம்பித்து கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் என அனைத்து ஊர்களிலும் முல்லைப் பெரியாறு கரை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
பல இடங்களில் வாய்க்காலாக மாறும் அவலம் அரங்கேறி வருகிறது. மழை வெள்ளத்தில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்படும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படும் முல்லைப் பெரியாற்றை காப்பாற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினரும்முன்வர வேண்டும். ஆற்றின் கரையோரங்களை மீட்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.