/உள்ளூர் செய்திகள்/தேனி/போடியில் கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்புபோடியில் கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
போடியில் கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
போடியில் கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
போடியில் கண்மாய் ஆக்கிரமிப்பு விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2011 10:39 PM
போடி : போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய் பல ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாறவில்லை.
இதனால் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. போடியில் 107 ஏக்கர் பரப்பளவில் பங்காருசாமி நாயக்கர் கண்மாய் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர், கொட்டகுடி ஆறு வழியாகவும் இக்கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நிரம்பியதும் மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய்களுக்கு நீர் செல்கிறது. பங்காருசாமி கண்மாயில் தேங்கும் நீரால் ஆயிரத்து 300 ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கு நேரடியாகவும், 400 ஏக்கருக்கு மேல் கிணற்று பாசனம் நடக்கிறது.
கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் வரும் அணைப்பிள்ளையார் கோயில் அணைப்பகுதி, கொட்டகுடி ஆறு, ராஜவாய்க்கால் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய் வரும் வாய்க்கால் இருபகுதிகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாறவில்லை. உள்பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் நீர் தேக்கவும் முடியவில்லை. கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து தென்னை, இலவம், கரும்பு பயிர் செய்துள்ளனர். இருபோக சாகுபடி நடந்த இங்கு ஒரு போக சாகுபடிக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்மாயை தூர்வாற வேண்டும். நீர்வரத்து வரும் வாய்க்கால் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.