/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆடி அமாவாசை விழாவிற்காக தயார் நிலையில் சதுரகிரி மலை : பாலித்தீன், பீடி, சிகரெட்டுக்கு தடைஆடி அமாவாசை விழாவிற்காக தயார் நிலையில் சதுரகிரி மலை : பாலித்தீன், பீடி, சிகரெட்டுக்கு தடை
ஆடி அமாவாசை விழாவிற்காக தயார் நிலையில் சதுரகிரி மலை : பாலித்தீன், பீடி, சிகரெட்டுக்கு தடை
ஆடி அமாவாசை விழாவிற்காக தயார் நிலையில் சதுரகிரி மலை : பாலித்தீன், பீடி, சிகரெட்டுக்கு தடை
ஆடி அமாவாசை விழாவிற்காக தயார் நிலையில் சதுரகிரி மலை : பாலித்தீன், பீடி, சிகரெட்டுக்கு தடை
வத்திராயிருப்பு : சதுரகிரி மலை ஆடி அமாவாசை திருவிழாவிழா ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
பாலித்தீன் , தண்ணீர் பாக்கெட், பீடி சிகரெட்டுக்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ,மலையேறும் பக்தர்களை அடிவாரத்திலேயே சோதித்து அனுப்பும் வகையில் , கண்காணிப்பு முகாமும் அமைக்கப்பட உள்ளது. போலீஸ் சார்பில் தாணிப்பாறை, வண்டிப்பண்ணை, மாவூத்து, வத்திராயிருப்பு பகுதியில் விருதுநகர் மாவட்ட போலீசார் 430 , மலைப்பாதை , மலைஉச்சி கோயில் வளாகம், வாழைத்தோப்பு பகுதியில் மதுரை மாவட்ட போலீசார் 400 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். சமூக விரோதிகளை கண்காணிக்க மக்களோடு கலந்து, மப்டி போலீசாரும் செயல்பட உள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஊர்களிலிருந்து தாணிப்பாறைக்கு 29 ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ராம்நகர் பளியர் குடியிருப்பு முன்பாகவே தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. சிறப்பு பஸ்கள் மட்டும் அடிவாரம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது.