/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரேஷன் கார்டு பெற தவறான முகவரி : கண்டுபிடித்தால் குற்ற நடவடிக்கைரேஷன் கார்டு பெற தவறான முகவரி : கண்டுபிடித்தால் குற்ற நடவடிக்கை
ரேஷன் கார்டு பெற தவறான முகவரி : கண்டுபிடித்தால் குற்ற நடவடிக்கை
ரேஷன் கார்டு பெற தவறான முகவரி : கண்டுபிடித்தால் குற்ற நடவடிக்கை
ரேஷன் கார்டு பெற தவறான முகவரி : கண்டுபிடித்தால் குற்ற நடவடிக்கை
சிவகாசி : ரேஷன் கார்டு பெற தவறான முகவரி கொடுப்போர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் எச்சரித்து உள்ளார்.
இதன்காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்குவதில், சிவில் சப்ளை துறையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனிடையே, ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், பொதுமக்களை எச்சரிக்கை ஏற்படுத்தவும் தாலுகா அலுவலங்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில்,''ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஆண்டுக்கு 2000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. தவறான விபரங்கள், முகவரியை கூறி, ரேஷன் கார்டு வாங்குவது ரேஷன் பொருட்களை கடத்துவதற்கு உடந்தையாக அமையும். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.எனவே, புதிய ரேஷன் கார்டு கோரி மனுச்செய்பவர்கள் சரியான பெயர்களை பூர்த்தி செய்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்,'' என, குறிப்பிடப்பட்டுள்ளது