/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
குற்றாலம் : ஆர்ப்பரித்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது.
அருவியின் உட்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று குளிக்க அனுமதிக்கவில்லை. அருவியின் ஓரமாக சுற்றுலா பயணிகள் குளித்து செல்ல போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். சுற்றுலா பயணிகள் வரிசை கார் பார்க்கிங் வரை நீண்டு காணப்பட்டது. ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்கு குறைவு இல்லை. புலியருவியில் தண்ணீர் வரத்து பரவலாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிறியவர் முதல் பெரியவர் அலை அலையாக சென்று குளித்து மகிழ்ந்தனர்.பழையகுற்றாலம் அருவி, சிற்றருவியிலும் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் நடத்தினர். பகல் நேரத்தில் வீசிய இதமான தென்றல் காற்று இரவு நேரம் குளிர் காற்றாக மாறியது. மொத்தத்தில் நேற்றைய சீசன் அருமையாக இருந்தது.


