ADDED : ஜூலை 25, 2011 01:57 AM
அரியலூர்: அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
நீதி மற்றும் நிர்வாகத்துறையில் ஏற்படும் லஞ்ச ஊழல் விசாரணை வரம்புக்குள் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைவரையும் ஆட்படுத்தும் வகையில், லோக்பால் அமைப் பை உடனே ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துக் கு கட்சியின் அரியலூர் பகுதி குழு செ யலாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் தண்டபா ணி, திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், இளைஞர் பெ ருமன்றம் கிருஷ்ணன், நகர செயலாளர் செல்லதுரை, ராஜேந்திரன், ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.