Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

தாயகம் திரும்பிய இந்திய வீரர்; மகிழ்ச்சி பொங்க மனைவி சொன்ன வார்த்தைகள் இதோ!

Latest Tamil News
புதுடில்லி: எல்லை தாண்டி சென்றதால் பாகிஸ்தான் வசம் இருந்த, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் பூர்ணம் குமார் ஷா தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி ரஜனி ஷா தெரிவித்தார்.

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) வீரர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் 20 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். இவர் மேற்குவங்க மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இவரை கைது செய்த தகவலை அறிந்த மனைவி ரஜனி ஷா கவலை அடைந்தார். அது மட்டுமின்றி கணவனை மீட்டு தாருங்கள் என அரசிற்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தார். இந்நிலையில், கணவன் விடுவிக்கப்பட்ட தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். பூர்ணம் குமார் ஷா மனைவி ரஜனி ஷா கூறியதாவது:

பிரதமர் மோடி இருப்பதால் தான் எல்லாம் சுமூகமாக நடக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

எனது கணவரை மீட்டதற்கு நான் என் கைகளைக் கூப்பி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காலையில் ஒரு அதிகாரியிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. என் கணவரும் வீடியோ கால் மூலம் என்னிடம் பேசினார். அவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறார்.

பதட்டமாக இருக்க வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். எனக்கு அனைவரின் ஆதரவும் இருந்தது. முழு நாடும் என்னுடன் நின்றது. எனவே, கூப்பிய கைகளுக்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவு காரணமாக தான் என் கணவர் இந்தியாவுக்கு திரும்ப முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us