இன்று 8, நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் கணிப்பு
இன்று 8, நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் கணிப்பு
இன்று 8, நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் கணிப்பு
ADDED : மே 14, 2025 03:01 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 14) 8 மாவட்டங்களிலும், நாளை (மே 15) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (மே 14) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 15) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 16ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.