/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி பள்ளி பெயர்மாற்றம் வலியுறுத்தல்மாநகராட்சி பள்ளி பெயர்மாற்றம் வலியுறுத்தல்
மாநகராட்சி பள்ளி பெயர்மாற்றம் வலியுறுத்தல்
மாநகராட்சி பள்ளி பெயர்மாற்றம் வலியுறுத்தல்
மாநகராட்சி பள்ளி பெயர்மாற்றம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2011 02:00 AM
மதுரை:மதுரை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் மன்ற பொதுக்குழுக் கூட்டம் தலைவர்
தானேஸ்வரி தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் நமச்சிவாயம், பொருளாளர்
ராமன் பங்கேற்றனர்.இக்கல்வி ஆண்டில் பல்வேறு நிலையிலும் பணிஉயர்வு அளிப்பது
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாடவாரி முன்னுரிமை பட்டியலும் இதுநாள் வரை
வெளியிடப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்துவதால் மாணவர் நலன் பாதிக்கும்.
இதனால் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லையென்ற செய்தி பரவி, மாநகராட்சி
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும். எனவே பணிஉயர்வை உடனே நடத்திட
வேண்டும்.பழங்காநத்தம், நெசவாளர் காலனி, ரிசர்வ்லைன் உயர்நிலைப் பள்ளிகளை
உடனடியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆசிரியர்களின் சேமநல
நிதிக்கு கணக்குச் சீட்டு வழங்கும்படி பலமுறை கேட்டும், இதுவரை
வழங்கப்படவில்லை. கல்வித் துறையில் வழங்குவது போல, வட்டியும்
கணக்கிடப்பட்டு, சேமநல நிதியுடன் சேர்த்து, அதற்கான சீட்டை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளை 'அரசு' என சேர்த்து அழைப்பது
போல, மாநகராட்சி பள்ளிகளையும், அரசு மாநகராட்சி பள்ளிகள் என பெயர் மாற்றம்
செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.