Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா

UPDATED : ஆக 23, 2024 01:25 AMADDED : ஜூலை 26, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பதக்கம் வெல்லும் இலக்குடன் இந்திய படை களமிறங்குகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கி (ஜூலை 26-) ஆக.11 வரை நடக்க உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம்.

இந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டு பிரிவில் 329 போட்டிகள் நடக்கிறது.

முதன்முறையாக பாரிசின் சென் நதியில் துவக்க விழா ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. 100 படகுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் செல்ல உள்ளனர்.

பாரிசின் அழகை ரசித்தவாறு 6 கி.மீ., துாரத்திற்கு படகில் பயணிக்கலாம். நதியின் இரு புறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண குவிந்துள்ளனர்.

பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா ஆகியோர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின் நடைபெற்ற அணிவகுப்பில் நம் மூவர்ணக்கொடியை சிந்து, சரத் கமல் ஏந்தி வந்தனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் தடகளம் (29), துப்பாக்கி சுடுதில் (21), ஹாக்கி (19) என மூன்று போட்டியில் மட்டும் 69 பேர் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் பங்கேற்ற நம் வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us