Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காமாட்சியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

ADDED : ஜூலை 21, 2011 12:53 AM


Google News

உடுமலை : உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில், ஆடிமாத சிறப்பு பூஜைகள் நாளை முதல் நடக்கிறது.

காலை 5.30 மணிக்கு கணபதிஹோமம், 7.00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், 10.00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம் பூஜைகளும்; மாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெறுகிறது.

வரும் 29ம் தேதி காலை 9.00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, ஜெயதுர்க்கா ஹோமம், 11.00 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு ஆராதனையும் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும்; 5ம் தேதி காலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. 12ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us