கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்
கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்
கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்

டார்ஜிலிங் : மேற்கு வங்க மாநிலத்தில், கூர்க்கா பகுதி தனி நிர்வாகத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.
எனினும், தனி மாநில கோரிக்கையை கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு வற்புறுத்தி வந்தது. இந்த கோரிக்கையை வற்புறுத்தி, தொடர்ந்து பந்த் அனுசரிக்கப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்கவில்லை, ஆனால், இப்பகுதி வளர்ச்சிக்கு வழிகாணும் வகையில், கூர்க்கா இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு தனி நிர்வாகம் அளிக்க, மம்தா தலைமையிலான புதிய அரசு முன்வந்தது.
இதையடுத்து, டார்ஜிலிங்கில் நேற்று, மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வர் மம்தா பானர்ஜி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குர்ராங் ஆகியோர் முன்னிலையில், கூர்க்கா பகுதி தனி நிர்வாகத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்கு வங்க உள்துறை செயலர் கவுதமா, மத்திய உள்துறை இணை செயலர் கே.கே.பதக்,கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலர் ரோஷன் கிரி ஆகியோர் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், 'கூர்க்கா தனி நிர்வாக பகுதியில் பல இன, மொழி, கலாசாரம் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். எனினும், இவர்கள்அனைவரும் இந்திய மக்கள். இதை கருத்தில் கொண்டு, இந்த நிர்வாகம் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த பகுதியின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என்றார்.