Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தஞ்சையில் இசை நாட்டிய விழா :ஜூலை 16ல் கோலாகல துவக்கம்

தஞ்சையில் இசை நாட்டிய விழா :ஜூலை 16ல் கோலாகல துவக்கம்

தஞ்சையில் இசை நாட்டிய விழா :ஜூலை 16ல் கோலாகல துவக்கம்

தஞ்சையில் இசை நாட்டிய விழா :ஜூலை 16ல் கோலாகல துவக்கம்

ADDED : ஜூலை 14, 2011 11:54 PM


Google News

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் இசை, நாட்டிய விழா பெசண்ட் அரங்கில் ஜூலை 16ம் துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது.

ஸ்ரீதியாக பிர்ம்ம சபா சார்பில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சையில்இசை, நாட்டிய விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடக்கும். இந்தாண்டு விழா ஜூலை 16ம் தேதி துவங்க உள்ளது. இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சபா துணை தலைவர் கோபாலன் கூறியதாவது: தியாக பிரம்ம சபா குழுவுக்கு புதிய தலைவராக தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தலைவர் அந்தோணிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செயலாளராக முதல் முறையாக வடிவுதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 16ம் தேதி தஞ்சை பெசன்ட் அரங்கில் விழா துவங்குகிறது. திருவையாறு தியாக பிரம்ம மகோற்சவ கமிட்டி தலைவர் ரெங்கசாமி மூப்பனார் விழாவை துவக்கி வைக்கிறார். குவெட்டார் நாட்டின் தலைமை வங்கியான தோகா வங்கி தலைமை அதிகாரி சீதாராம் பங்கேற்கிறார். முதல் நிகழ்ச்சியாக சென்னை டாக்டர் கணேஷ் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. வரும் 17ம் தேதி ராகம் சகோதரிகள் சிவரஞ்சனி, நளினிகாந்தி ஆகியோர் பாடுகிறார்கள், லட்சுமி வெங்கடரமணி வயலின், கும்பகோணம் ராமகிருஷ்ணன் மிருந்தங்கம், புதுக்கோட்டை சோலைமலை கடத்துடன் இசை நிகழச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி திருச்சி அகில இந்திய வானொலி ஒலிபரப்பு செய்கிறது. வரும் 18ம் தேதி கர்நாடகா சகோதரர்கள் சசிகிரண், கணேஷ் ஆகியோர் பாட்டும், நாகை ராம் வயலின், தஞ்சை முருகபூபதி மிருதங்கத்துடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி தோகா வங்கி தலைமை அதிகாரி சீத்தாராமன் முன்னிலையில் ரமணியின் புல்லாங்குழல் இசை, சென்னை ஸ்ரீதர் வயலின், நெய்வேலி நாராயணன் மிருதங்கம், ஆலத்தூர் ராஜகணேஷ் கஞ்சிராவுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 20ம் தேதி கர்நாடக இசை கலைஞர் டி.என்.ஷேசகோபாலன், முதல்வர் டி.என்.எஸ்.கிருஷ்ணாவின் பாட்டு, அனந்தபத்மநாபன் வயலின், சிவராமன் மிருதங்கத்துடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 21ம் தேதி ஒரிசாõ மாநிலத்தை சேர்ந்த ஒடிசி., நடன கலைஞர் சங்கீதாநாஷ்சின் ஒடிசி., நடனமும், நிறைவு நாளான 22ம் தேதி சுசித்ராவின் ராமகிருஷ்ண பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் ஹரிகதா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் திருச்சி அகில இந்திய வானொலி இயக்குனர் பொறுப்பு சீனிவாசன் பங்கேற்கிறார். இவ்வாறு ஒருவார காலம் நடக்கும் இசை, நடன நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் என தஞ்சாவூர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது, செயலாளர் வடிவுதேவி, பொருõளர் நந்தகுமார், துணை செயலாளர் சங்கரசுப்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us