ADDED : ஜூலை 14, 2011 11:51 PM
சிவகாசி : மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன் போட்டி 16ம்தேதி சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக்., பள்ளியில் நடக்கிறது.
அனைத்து பள்ளிகளும் பங்கேற்கலாம். பள்ளிக்கு ஒரு அணி மட்டுமே பங்கேற்கவேண்டும். வெற்றி பெறும் அணிக்கு எஸ்.கே.எம். சுழற்கோப்பை வழங்கப்படும். இரண்டு, மூன்று இடம் பெறும் அணிகளுக்கு தனிநபர் பரிசு வழங்கப்படும். விரும்பும் அணிகள் 16ம்தேதி காலை 8 மணிவரைபதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 98438 22890 என்ற மொபைலில் தெரிந்து கொள்ளலாம், என ,மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.