Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்

UPDATED : மே 21, 2025 06:52 PMADDED : மே 21, 2025 06:43 PM


Google News
Latest Tamil News
இந்தூர்: என்னை இடமாற்றம் செய்தவர்களை கடவுள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார் என பிரிவு உபச்சார விழாவில் மத்திய பிரதேச இந்தூர் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி டி. வெங்கட் ரமணா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் கடந்த 2023 ல் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்தூர் கிளை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். வரும் ஜூனில் பணி நிறைவு பெறஉள்ள நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு நீதிபதி டி.வி. ரமணா பேசியது, எனது சொந்த மாநிலமான ஆந்திராவில் இருந்து எந்தவித காரணம் இல்லாமல் நான் மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்.

இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம், எனது மனைவி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டும், நரம்பு சம்பந்தபட்ட நோயால் அவதியுறுவதால் உடனடிருந்து பார்த்துக்கொள்ள வேண்டி, என்னை கர்நாடாவிற்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

எனது கோரிக்கையை பரிசீலிக்காமல் வேண்டுமென்றே மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்தூர் கிளைக்கு இடம் மாற்றம் செய்துவிட்டனர். என்னைத் துன்புறுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காரணமே இல்லாமல் வேறு மாநிலத்திற்கு என்னை இடமாற்றம் செய்து விட்டார்கள். இப்போது அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்களின் ஈகோவைத் திருப்திப் படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் கடவுள் அவர்களை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டார். வேறு வழியில் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் எனது கோரிக்கையை பரிசீலிக்கலாம் ஆனால் காலம் கடந்துவிட்டது ஒய்வு பெற போகிறேன். இடமாறுதலால் மன அழுத்தம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் எனக்கு சக நீதிபதிகள் மற்றும் பார்கவுன்சில் நிர்வாகிகள் முழு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிஇவ்வாறு நீதிபதி ரமணா தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us