ராமேஸ்வரம் கோவிலில் பளபளக்கும் சுவாமி வாகனங்கள்
ராமேஸ்வரம் கோவிலில் பளபளக்கும் சுவாமி வாகனங்கள்
ராமேஸ்வரம் கோவிலில் பளபளக்கும் சுவாமி வாகனங்கள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சேதமடைந்த சுவாமி சிலைகள் மற்றும் தங்கம், வெள்ளியினாலான வாகனங்கள் பளபளக்க துவங்கி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, கோவிலில் உள்ள சுவாமி, அம்பாள் உலா செல்லும் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்கள், கேடயங்களை செப்பனிட்டு பாலிஷ் செய்யும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தங்க கேடயம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி யானை, வெள்ளி கேடயம் உள்ளிட்ட வாகனங்களை, இயற்கை மருந்துகளால் பாலிஷ் செய்து மெருகேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது வாகனங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை துணை கமிஷனர் மற்றும் நகை சரிபார்ப்பு அதிகாரி அன்புமணி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில் நடந்து வரும் இப்பணிகளை தொடர்ந்து தங்கம், வெள்ளி ரதங்கள் மெருகேற்றும் பணியும் சில தினங்களில் துவங்க உள்ளது.