லஞ்சம் வாங்கிய வழக்குகளில் அரசு அதிகாரிகள் 8 பேருக்கு சிறை
லஞ்சம் வாங்கிய வழக்குகளில் அரசு அதிகாரிகள் 8 பேருக்கு சிறை
லஞ்சம் வாங்கிய வழக்குகளில் அரசு அதிகாரிகள் 8 பேருக்கு சிறை

சென்னை,: லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த மாதத்தில் மட்டும், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள் என, அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் அடிப்படையில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி, லஞ்சம் வாங்குவோரை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்--பதிவாளராக வேலை பார்த்த சசிகலா, பத்திரப்பதிவு செய்ய 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
![]() |
இவர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஒன்றுக்கு மாதம், 1,000 ரூபாய் தர வேண்டும் எனக்கூறி, லஞ்சமாக, 3,000 ரூபாய் பெற்றார். இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 20,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த மாதத்தில் மட்டும், இரண்டு வி.ஏ.ஓ.,க்கள் உட்பட அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.