வேலூர் டிராவல்ஸ் அதிபரை தாக்கி கார் கடத்தல் போலீசாருக்கு "டிமிக்கி': கடத்தல் கும்பல் "எஸ்கேப்'
வேலூர் டிராவல்ஸ் அதிபரை தாக்கி கார் கடத்தல் போலீசாருக்கு "டிமிக்கி': கடத்தல் கும்பல் "எஸ்கேப்'
வேலூர் டிராவல்ஸ் அதிபரை தாக்கி கார் கடத்தல் போலீசாருக்கு "டிமிக்கி': கடத்தல் கும்பல் "எஸ்கேப்'
புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்த வேலூர் டிராவல்ஸ் அதிபரை தாக்கி, காரை கடத்திய மர்ம கும்பலை, ரோந்து போலீசார் துரத்திச் சென்று மடக்கி, காரையும், உரிமையாளரையும் மீட்டனர்.
தங்களது கார் பிரேக் டவுன் ஆகி விட்டதாகவும், தங்களுக்கு உதவி செய்யுமாறும், அந்த கும்பல், டேனியலிடம் தெரிவித்தது. உடனடியாக அவர், தன் கார் டிரைவரிடம், என்னவென்று பார்க்குமாறு கூறினார். டிரைவருடன், டாக்டர் மகேந்திரனும் கீழே இறங்கினார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல், திடீரென டேனியலை, காருக்குள்ளேயே தாக்கியதோடு, அவரை காருடன் கடத்திச் சென்றது. அதிர்ச்சியடைந்த டாக்டர் மகேந்திரன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். வாக்கி டாக்கி மூலம், அனைத்து மொபைல் வாகனங்களுக்கும், போலீசார் தகவல் தெரிவித்தனர். ராஜிவ் சிலை அருகில் இருந்த, மொபைல் வாகனம் போலீசார் கண்ணில், இந்த கார் தென்பட்டது. போலீசாரை கண்டதும், மர்ம கும்பல், காரை நிறுத்தாமல், திண்டிவனம் சாலை நோக்கி, வேகமாக விரைந்தது. போலீசார், காரை துரத்திச் சென்றனர்.
திண்டிவனம் - ஆரோவில் சாலை சந்திப்பு அருகே, அந்த காரை, போலீசார் மடக்கினர். அதற்குள், காரில் இருந்த மூன்று பேர், காரை நிறுத்தி விட்டு, தப்பியோடினர். காரில் இருந்த டேனியலையும், காரையும், போலீசார் மீட்டுக் கொண்டு வந்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.