தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தர்ம சங்கடம்
தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தர்ம சங்கடம்
தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தர்ம சங்கடம்

பாட்னா: பீஹாரில் விளையாட்டு தின துவக்க விழாவில் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் அருகே நின்றிருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் முதல்வர் நிதிஷ்குமார் குறும்பு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாடாலிபுத்திர விளையாட்டு மைதான வளாகத்தில் நேற்று மாநில அரசு சார்பில்விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது. இதில் முதல்வர் நிதிஷ்குமார். அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மரபுபடி துவக்க விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் முதல்வர் நிதி்ஷ்குமார், தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல், தன் அருகே நின்றிருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், முதல்வரின் முதன்மை செயலருமான தீபக் குமாரிடம் சிரித்து பேசியும், அவரது தோளில் கை வைத்து குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தார். தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டிருந்த அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி முதல்வரின் செயலால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். இது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மாநில முதல்வர் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.