Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மர்மமான முறையில் இறந்த ரவுடியின் உடல் உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு

மர்மமான முறையில் இறந்த ரவுடியின் உடல் உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு

மர்மமான முறையில் இறந்த ரவுடியின் உடல் உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு

மர்மமான முறையில் இறந்த ரவுடியின் உடல் உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு

ADDED : ஜூலை 12, 2011 12:23 AM


Google News
திருச்சி: புதுக்கோட்டை போலீஸார் அடித்ததால் இறந்ததாக கூறப்படும் ரவுடியின் உடலை, திருச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் வாங்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை பூதலூர் அருகே வடகால் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா (எ) சிதம்பரம் (33). ரவுடியான இவர் மீது தஞ்சையில் ஒரு கொலை வழக்கும், அறந்தாங்கியில் கொலைமுயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது. பிரபல ரவுடியான இவரை பலர் கொல்ல முயற்சித்ததால், புதுக்கோட்டை காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, செங்கல் சூளை வேலை பார்த்தார். கடந்த ஏழாம் தேதி வழக்கு தொடர்பாக அறந்தாங்கி நீதிமன்றத்துக்கு, புதுக்கோட்டை உசிலங்குளம் பஸ்ஸ்டாப் ஸ்டாண்ட்டை சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜின் 'சுமோ' காரை வாடகைக்கு எடுத்துச் சென்றார். புதுகை வந்த பிறகு, வாடகை கொடுக்காமல் அரிவாளுடன் தகராறு செய்தார். தகவலறிந்த போலீஸார் சின்னப்பாவை பிடித்து கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஒன்பதாம் தேதி நெஞ்சு வலிப்பதாக கூறிய சின்னப்பா, புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீஸார் சின்னப்பா அடித்து கொன்று விட்டு, நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடுவதாகவும், பிரேத பரிசோதனையை திருச்சி அரசு மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று காலை திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழு, சின்னப்பா உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். சோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் மாவட்டச் செயலாளர் வக்கீல் ஆதி நாரயணமூர்த்தி, சின்னப்பாவின் வக்கீல் முருகேசன் மற்றும் உறவினர்கள், ''சின்னப்பாவை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்ற, டி.எஸ்.பி., கலியபெருமாள், இன்ஸ்பெக்டர் சிவராமன், எஸ்.ஐ., தாமஸ், ஏட்டு பரமேஸ்வரி மீது கொலை வழக்கு பதிவுச் செய்து, அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் உடலை பெற்றுக் கொள்வோம்,'' என்றனர். தகவலறிந்த திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'வழக்கை விசாரித்த கீரனூர் மாஜிஸ்ரேட் ராதிகா முன், பிரேத பரிசோதனை விபரங்கள், வீடியோ சமர்ப்பிக்க வேண்டும். அவர் திருப்தி தெரிவித்தால் உடலை பெற்றுக்கொள்கிறோம்' என்று நிபந்தனை விதித்தனர். அதன்படி, திருச்சி கி.ஆ.பெ., அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேற்று மதியம் வந்த மாஜிஸ்ரேட் ராதிகாவிடம் அனைத்து விபரங்களும் அளிக்கப்பட்டது. 'உடனடியாக உடலை பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று அவர் உத்தரவிட்டார். ஆனாலும், இரவு ஏழு மணி வரை சின்னப்பாவின் உடலை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us