Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

ADDED : ஜூலை 11, 2011 10:44 PM


Google News

பந்தலூர் : பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் பழங்குடியின மாணவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பதிவு முகாம் நடந்தது.ஏலமன்னா சி.டி.

ஆர்.டி. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சி.டி. ஆர்.டி. பணியாளர் சரோஜா வரவேற்றார். செயல் இயக்குநர் ரங்கநாதன் முன்னிலை வகித்து பேசுகை யில்,'' பழங்குடியின மாணவர்கள் படிப்பில் நாட்டம் செலுத்தா மல் கூலி வேலைக்கு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படுகின்றனர். பழங்குடியின பெற்றோர்களும் அதற்கு துணை நிற்பதாலும் எதிர்கால வாழ்வு பாழடைந்து வருகிறது. எனவே இனி வரும் காலங்களில் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது,'' என்றார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து உதவி வேலை வாய்ப்பு அலுவலர் குணசேகரன் பேசுகையில்,''வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு வந்து பதிவு செய்வதானால் நேர விரயம், பணம் விரயம் செய்து ஊட்டிக்கு வரவேண்டும். ஆனால் அந்த நிலை மாறி பழங்குடியினர் கிராமத்திற்கே வந்து பதிவு செய்வதற்கு சி.டி.ஆர்.டி. முயற்சி மேற்கொண்டது. பதிவு செய்வதுடன் நின்றுவிடாமல் ஒவ்வொரு முறையும் தவறாமல் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தற்போது ஓசூர் பகுதியில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பழங்குடியினர்களை வேலைக்கு எடுக்க தனியார் நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. பணிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் சி.டி.ஆர். டி.யுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் மூலம் வேலைக்கு சேர்த்துவிடப்படும்,'' என்றார். பழங்குடியின மாணவர்கள் 40 பேர் பங்கேற்று பதிவு செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவி வேலை வாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியம், சி.டி. ஆர்.டி. பணியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் முரளி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us