அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறார் பிரதமர்: சுஷ்மா
அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறார் பிரதமர்: சுஷ்மா
அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறார் பிரதமர்: சுஷ்மா
ADDED : செப் 28, 2011 12:29 PM
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களை காப்பாற்ற முயல்வதாக லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
2ஜி விவகாரத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், 2ஜி விவகாரத்தில் இரு அமைச்சர்களும் மோதிக்கொள்வது காங்கிரசின் உட்கட்சிப்பூசல் அல்ல என்று தெரிவித்தார். இவ்விஷயத்தில் தனது அமைச்சர்களை பிரதமர் காப்பாற்ற முயல்வதாகவும் சுஷ்மா குற்றம் சாட்டினார்.