சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைத்து விட்டதா? : உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு
சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைத்து விட்டதா? : உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு
சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைத்து விட்டதா? : உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு
ADDED : ஆக 17, 2011 12:22 AM
சென்னை : பள்ளிகளில், சமச்சீர் கல்வி புத்தகங்கள் சென்றடைந்துவிட்டதா என்பதையும், எந்தெந்த பள்ளிகளில் தேவை இருக்கிறது என்பதையும் கண்டறிய, உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர்கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், இலவச பாடப் புத்தகங்கள் கிடைத்ததை உறுதி செய்வதற்காக, உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஐந்து பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.தேவை இருந்தால், அது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தால், சம்பந்தபட்ட பள்ளிக்கு,தேவையான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
கூடுதல் பாடப் புத்தகங்கள் இருந்தால், அவற்றை பெற்று, தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.