Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மற்றொரு பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

மற்றொரு பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

மற்றொரு பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

மற்றொரு பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு

Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் பணியாற்றும் பாக்., தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்காக, 24 மணி நேரத்தில் வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக பெண் உட்பட இருவரை பஞ்சாப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். விசாரணையில் அவர்களுக்கும் பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நம் வெளியுறவு அமைச்சகம் அந்த துாதரக அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அந்த அதிகாரி, இந்தியாவில், தனது அதிகார வரம்பை மனதில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதர்கள் அல்லது அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us