ADDED : ஆக 21, 2011 01:41 AM
சேலம் : சேலம் ஊத்துமலை முருகன் கோவில் கால பைரவருக்கு, தமிழகத்திலேயே முதன் முறையாக, ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டு, இன்று, சிறப்பு பூஜை நடக்கிறது.
சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில், ருத்ராட்ச தேர், ருத்ராட்ச பள்ளியறை மட்டுமின்றி, பக்தர்களுக்கு ருத்ராட்சம், பிரசாதமாக வழங்கப்படுகிறது. 21 ஆயிரம் ருத்ராட்சத்தைக் கொண்டு, சேலம் ஊத்துமலை முருகன் கோவில் கால பைரவருக்கு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின், தலைமை அர்ச்சகர் திருஞான சம்பந்த ஈசான சிவாச்சாரியார் கூறுகையில், 'அஷ்டமியான இன்று, ஸ்ரீ சக்ர மஹா காலபைரவர் சன்னிதியில், 21 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ருத்ராட்ச பந்தல் அமைக்க உள்ளோம். விநாயகர் ருத்ராட்சம், ஆறுமுக ருத்ராட்சம், கவுரிசங்கர் ஒரு முகம், கர்ப்கவுரி ருத்ராட்சம், திருமூர்த்தி உள்ளிட்ட, 10 முதல் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, அபூர்வ ருத்ராட்சங்கள், பந்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன,' என்றார்.


