ADDED : ஆக 11, 2011 10:57 PM
ஊட்டி : மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளதால் தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் கூறியுள்ளதாவது:மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளை(பாரத் ரத்னா, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2012ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் தொடர்பான விண்ணப்ப படிவம் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் செப்.,12ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சிவசங்கரன் கூறியுள்ளார்.