விபச்சாரம்: 7 வெளிநாட்டு அழகிகள் கைது
விபச்சாரம்: 7 வெளிநாட்டு அழகிகள் கைது
விபச்சாரம்: 7 வெளிநாட்டு அழகிகள் கைது
UPDATED : ஜூலை 21, 2011 10:31 AM
ADDED : ஜூலை 20, 2011 05:48 AM
புதுடில்லி: சுற்றுலா விசா பெற்று இந்தியா வந்த 7 வெளிநாட்டு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
டில்லியின் புறநகர்பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. இதைத்தொடர்ந்து தெற்கு டில்லியில் உள்ள ஒரு பகுதியில் , துணை போலீஸ் கமிஷனர் அசோக் சாந்த் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் சென்றனர். அங்கு வாடிக்கையாளர்களைப்போல் நடித்து ஆசாமி ஒருவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவன் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த தீபக்வர்மா (25) என்பதும், புரோக்கராக செயல்பட்டு வருவதாகவும் கூறவே, அவன் கொடுத்த தகவலை அடுத்து 7 வெளிநாட்டு விபச்சார அழகிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் நாட்டினைச் சேர்ந்தவர்கள் என்றும், சுற்றுலா விசா பெற்று இரண்டு மாதங்கள் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், முக்கிய தொழிலதிபர்களிடம் ரூ. ஒரு லட்சம் வரை பெற்று பாலியல் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தெற்கு டில்லியில் சொகுசு பங்களாவினை மாதம் ரூ.35 ஆயிரம் வரை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் வெளிநாட்டு அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இரண்டு மாதங்கள் தங்கிய பின் தங்களது தொழிலை தெற்கு டில்லியிலிருந்து புறநகரின் வேறு பகுதிகளுக்கு மாற்றுவதும், இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இவர்கள் பெரும் தொழிலதிபர்கள் , வி..ஐ.பிக்கள் இருக்கும் இடங்களைத்தான் குறி வைத்து செயல்பட்டு வருகின்றனர் என போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார்.