சிரியாவின் பிரதான வங்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை
சிரியாவின் பிரதான வங்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை
சிரியாவின் பிரதான வங்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை
ADDED : ஆக 11, 2011 11:29 PM

வாஷிங்டன்: சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள், அரசு மூலம் அடக்கப்பட்டு வருகின்றன.
அல் அசாத்தின் 41 ஆண்டு கால குடும்ப ஆட்சியை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்திய 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா அரசின் இந்த நடவடிக்கையை ஐ.நா., பாதுகாப்பு சபை கண்டித்துள்ளது; பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிரியாவின் பிரதான சிரியா வங்கி, அதிபர் அல் அசாத், வட கொரியாவிடமிருந்து மரபுசாரா ஆயுதங்களை வாங்குவதற்கு நிதியுதவி செய்ததால், அந்த வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதே போல, சிரியாவின் தொலைபேசி நிறுவனமான சிரியா டெல், மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.