Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்

நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்

நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்

நான் பேசியதை அண்ணாமலை வெளியிடட்டும்: அமைச்சர் மா.சு., பதில்

UPDATED : ஜூன் 06, 2025 10:56 PMADDED : ஜூன் 06, 2025 09:45 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' தி.மு.க., வட்ட செயலாளர் சண்முகத்துடன் நான் என்ன பேசினேன் என்பதை அண்ணாமலை வெளியிடட்டும்'', என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஈரோட்டில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: விழுப்புரத்தில் கொரோனாவால் இறந்தவர் எனக்கூறப்படுபவரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இது குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும். அதனை கொரோனா இறப்பாக எடுத்து கொள்ள முடியாது.

தற்போது பரவும் கொரோனா வீரியம் இழந்தது. நான்கு நாட்களில் சரியாகிவிடும். கொரோனாவை கண்டு பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.அதிமுக ஆட்சி காலத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருந்தது. தற்போது 3 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிக்கும் அளவுக்கு வசதி உள்ளது.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் என்னுடன் பேசினார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறவில்லை. சண்முகம் என்ற வட்ட செயலாளர் தான் என்னிடம் பேசியதாக கூறினார்.

ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவன் என்னுடன் ஒரு முறை கூட போனில் பேசியது இல்லை. ஞானசேகரன், சைதை தொகுதியைச் சேர்ந்தவன். கோட்டூர் வட்டத்தை சேர்ந்தவன். ஒரு முறை மழை வெள்ளத்தை பார்வையிட நானும், துணை மேயர் மகேஷ்குமாரும், அலுவலர்களும் சென்ற போது காலை சிற்றுண்டியை வட்ட செயலாளர் வாங்கி வந்து அவனது வீட்டு வாசலில் சாப்பிட வைத்தார். அப்போது, ஒரு போட்டோ எடுத்ததை தவிர எனக்கும் அவனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

சண்முகம் என்னிடம் போனில் பேசினார் என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். அன்றைக்கு சண்முகம் என்னை போனில் அழைக்கக் காரணம், அந்த வட்டத்தில் 2 ஆயிரம் முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு கூப்பிட அழைத்தார்.

போன் நம்பரை எடுத்து சண்முகம் என்னை அழைத்ததை கண்டுபிடிக்க முடிந்த அவருக்கு, அந்த போனில் எனது குரலை எடுக்க வாய்ப்பு இருக்கும். என்ன பேசினோம். அவர் என்ன பேசினார். அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என தெரியும். அதையும் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us