/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளம் வராக நதியில் மரங்களை நட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் ஆபத்துபெரியகுளம் வராக நதியில் மரங்களை நட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் ஆபத்து
பெரியகுளம் வராக நதியில் மரங்களை நட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் ஆபத்து
பெரியகுளம் வராக நதியில் மரங்களை நட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் ஆபத்து
பெரியகுளம் வராக நதியில் மரங்களை நட்டு குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் ஆபத்து
ADDED : செப் 06, 2011 10:44 PM
பெரியகுளம் : பெரியகுளம் வராகநதியில் பலவகையான மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்து வருவதால், குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வராகநதியை ஆக்கிரமிப்பு செய்து,இலவம், பப்பாளி உட்பட பலவகையான மரங்கள் வளர்ப்பதால், குடிநீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. ஒருசிலர் செய்த இந்த தவறை பின்பற்றி தற்போது பலரும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் காலப்போக்கில் வராகநதி 'ஓடை' யாக மாறிவிடும் நிலை ஏற்டும். ஆற்றின் நீரோட்ட பாதையில் மரங்கள் வளர்த்து வருவதால் தண்ணீர் செல்லும் பாதை மாறுபட்டுள்ளது.குடிநீர் ஆதாரப்பகுதிகள்: வராகநதியில் தண்ணீர் வரும் காலங்களில் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் போன்ற ஊர்களில் குடிநீர் ஆதாரப்பகுதிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மரங்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தற்போது தண்ணீர் குறைந்தளவே சேகராமகிறது. வராகநதியில் ஆக்கிரமிப்பு மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.