மழையே வா... மகிழ்ச்சியை தா!: 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்குமாம்!
மழையே வா... மகிழ்ச்சியை தா!: 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்குமாம்!
மழையே வா... மகிழ்ச்சியை தா!: 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்குமாம்!
UPDATED : ஜூன் 03, 2024 01:58 PM
ADDED : ஜூன் 03, 2024 01:22 PM

சென்னை: கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 5ம் தேதி
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஜூன் 5ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், கேரள, கர்நாடகக் கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் ஆகியவற்றில், வரும் ஜூன் 6ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.