ADDED : ஆக 12, 2011 12:00 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 5,000 ரூபாய் மதிப்புள்ள கால்நடை தீவனப் புல் எரிந்து சாம்பலானது.
கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூரை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. அவரது குடியிருப்பு வீட்டையொட்டி உள்ள பகுதியில், கால்நடை தீவன மக்காச்சோளம் புற்களை அடுக்கி வைத்து பாதுகாத்து வந்துள்ளார். நேற்று மதியம் 3 மணியளவில், கால்நடை தீவனம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தகலவறிந்த கெங்கவல்லி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில், 5,000 ரூபாய் மதிப்புள்ள மக்காச்சோள தீவன புல் கருகி சாம்பலானது. தீவிபத்து குறித்து கெங்கவல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.