/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கழிப்பிடம் சீரமைக்க பா.ஜ., கோரிக்கைகழிப்பிடம் சீரமைக்க பா.ஜ., கோரிக்கை
கழிப்பிடம் சீரமைக்க பா.ஜ., கோரிக்கை
கழிப்பிடம் சீரமைக்க பா.ஜ., கோரிக்கை
கழிப்பிடம் சீரமைக்க பா.ஜ., கோரிக்கை
ADDED : செப் 16, 2011 12:05 AM
ஓசூர்: 'பாழடைந்து வரும் கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்' என ஓசூர் நகர பா.ஜ., தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் நகராட்சிக்குட்பட்ட முக்கால் சென்ட் பகுதியில், 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதியில்லை. அதனால், அவர்கள் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால், அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு பராமரிப்பு இல்லாமல் சுகாதார கழிப்பிடம் செயல்படாமல் உள்ளது. இந்த கழிப்பிடத்தை பராமரித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் உள்ள இடம் முழுவதும் புதர் மண்டி வனப்பகுதி போல் காணப்படுகிறது. இப்பகுதியை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


