ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்: காங்கிரஸ் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்: காங்கிரஸ் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்: காங்கிரஸ் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி:மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசாணையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வரும் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. பிரதமர் மனதை மாற்றிக் கொண்டு விட்டாரா? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கெஜட் அறிக்கையில் இல்லை?
வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால் வெறும் 575
கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணம் எங்கே?
இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் இந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஜாதி வாரியான கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு வெளிப்படையாக கூறி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.