/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்புஎக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஆக 05, 2011 04:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
பதவியேற்றனர்.பிரெஞ்சு சொல்தா அரங்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த
விழாவில் புதுச்சேரி எக்ஸ்லன்ஸ் லயன் சங்கத்தின் தலைவராக பிரவீனா,
செயலாளராக சோமு, பொருளாளராக வெங்கடேஷ் மற்றும் அரிவையர் சங்கத் தலைவராக
சீமோன், செயலாளராக லலிதா, பொருளாளராக புஷ்பா ஆகியோர் பதவியேற்றனர்.புதிய
நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம் பதவி பிரமாணம் செய்து
வைத்தார்.
இரண்டாம் துணை நிலை ஆளுநர் மூக்கையா சேவைகளை ஆரம்பித்து
வைத்தார்.முதல் துணை மாவட்ட ஆளுநர் ஸ்வேத்த குமார் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார். ஆளுமைப் பண்பு பயிற்சியாளர் முரளி, புது உறுப்பினர்களை
அறிமுகம் செய்து வைத்தார்.நிர்வாகிகள் பாஸ்கரன், கலாவிசு, ஜோஸ்பின், பிரியா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.