ADDED : ஜூலை 26, 2011 09:56 PM
சேத்தூர்:சேத்தூரில் ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பிரதிநிதி குருசாமி தலைமையில் நடந்தது.நகர செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
மாவட்ட தொழிற்சங்க செயலாளர் காதர்மைதீன்,ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வைகோ தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம்,மாநாட்டில் பங்கு பெறுவது, ஆரம்ப சுகாதார நிலைய குறைபாடுகளை களைவது உட்பட பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.