/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மாணவர் காங்., தேர்தல் அதிகாரி தகவல்ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மாணவர் காங்., தேர்தல் அதிகாரி தகவல்
ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மாணவர் காங்., தேர்தல் அதிகாரி தகவல்
ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மாணவர் காங்., தேர்தல் அதிகாரி தகவல்
ஆன் லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை மாணவர் காங்., தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : ஆக 24, 2011 12:06 AM
புதுச்சேரி : புதுச்சேரி காங்., அலுவலகத்தில் மாணவர் காங்., உறுப்பினர்
சேர்க்கை துவக்க நிகழ்ச்சிநேற்று நடந்தது.
மாநில காங்., தலைவர்
ஏ.வி.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் காங்., அமைப்பின்
மத்திய தேர்தல் அதிகாரி ரோஜி ஜான், படிவத்தை வழங்கி உறுப்பினர்
சேர்க்கையைத் துவக்கி வைத்து பேசியதாவது: 'புதுச்சேரியில் இரண்டாம்
கட்டமாக மாணவர் காங்., அமைப்பிற்கு உறுப்பினர் சேர்க்கை
துவக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 3500 பேர் உறுப்பினர்களாகச்
சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு எதுவும்
நிர்ணயிக்கவில்லை. இருந்தாலும், அதிகளவில் உறுப்பினர்களைச் சேர்க்க
திட்டமிட்டுள்ளோம். உறுப்பினர் சேர்க்கை, வரும் 30ம் தேதி வரை நடத்தப்பட
உள்ளது. அதன் பிறகு தேர்தல் நடவடிக்கைகள் துவக்கப்படும். இந்த ஆண்டு
முதன்முறையாக சண்டிகர், புதுச்சேரியில் ஆன் லைன் மூலம் மாணவர் காங்.,
உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி
கல்லூரிகளில் மாணவர் தேர்தல் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு
பிரச்னையை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். கல்வி நிறுவனங்களில்
மாணவர் தேர்தல் நடத்த அரசு முன் வர வேண்டும். ஜனநாயக நாட்டில் எந்த
மட்டத்திலும் ஊழல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.