புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த மோடி படம்
புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த மோடி படம்
புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த மோடி படம்
ADDED : செப் 18, 2025 01:32 AM

துபாய்: பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடத்தில் பிரதமர் மோடியின் புகைபடம் ஒளிர்ந்தது.
பிரதமர் மோடி நேற்று (செப் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். சிறந்த நிர்வாகியான மோடியை உலக தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மோடியின் புகைப்படம் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ஹேப்பி பர்த்டே என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.