/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபர் கொலை வழக்கு போலீசார் திணறல்வாலிபர் கொலை வழக்கு போலீசார் திணறல்
வாலிபர் கொலை வழக்கு போலீசார் திணறல்
வாலிபர் கொலை வழக்கு போலீசார் திணறல்
வாலிபர் கொலை வழக்கு போலீசார் திணறல்
ADDED : ஜூலை 27, 2011 01:22 AM
கிருமாம்பாக்கம் : சவுக்கு தோப்பில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த வள்ளுவர்மேடு கடற்கரையோர சவுக்கு தோப்பில் கடந்த 16ம் தேதி 27 வயது மதிக்கத்தக்க வாலிபர், உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தியேன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். அடையாளம் தெரியாத வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அழுகிய நிலையில் வாலிபரின் உடல் காணப்பட்டதால், இதுவரை கண்டு பிடிப்பதில் போலீசாருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாலிபரை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து துப்பு கிடைக்காததால், போலீசார் திணறி வருகின்றனர்.