Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பி.எம்.எல்.-என்., தலைவராக நவாஸ் தேர்வு

பி.எம்.எல்.-என்., தலைவராக நவாஸ் தேர்வு

பி.எம்.எல்.-என்., தலைவராக நவாஸ் தேர்வு

பி.எம்.எல்.-என்., தலைவராக நவாஸ் தேர்வு

UPDATED : ஜூலை 29, 2011 01:40 AMADDED : ஜூலை 28, 2011 09:40 PM


Google News

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பி.எம்.எல் - என்.,) கட்சியின் தலைவராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்,61, ஏகமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத் நகரில் நடந்த, அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவராக நவாஸ் ஷெரீப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என, கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் இக்பால் ஜாபர் ஜகரா தெரிவித்தார். கடந்த 1990 முதல் 1999க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பாக்.,கின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப்.

பாக்., ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம், திடீர் ராணுவப் புரட்சி நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். இதையடுத்து, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு, நாடு கடத்தப்பட்டார். அதன்பின், எட்டு ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், 2007ம் ஆண்டு மீண்டும் பாக்., திரும்பினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us